×

வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மைப்படுத்தும் பணி

பண்ருட்டி, அக். 18: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவுரையின் பேரில் பண்ருட்டி அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. இதேபோல் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் உதயகுமார் தலைமையில் சமூக நலத்திட்ட தாசில்தார் பூபாலசந்திரன் முன்னிலையில் வருவாய் துறை ஊழியர்கள் பலர் தங்களது அலுவலக வளாகத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பொக்லைன் இயந்திரம் கொண்டு முட்புதர்கள் அகற்றப்பட்டன. பண்ருட்டி தாலுகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க தாசில்தார் அறிவுரை வழங்கினார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் கவுரி, துணை தாசில்தார் மோகன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணா மற்றும் ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Tags : Wattsier ,
× RELATED ஊரக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்