×

தொடர்ந்து 3வது முறையாக தங்கப்பதக்கம் வென்று வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி சாதனை

வீரவநல்லூர், அக். 18: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 12வது  பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவி மேரி, இளங்கலை பட்டப்படிப்பில் (பிபிஇஎஸ்) பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். ஏற்கனவே  இளங்கலை பட்டபடிப்பில் 2013-16ம் கல்வியாண்டில் மரிய டெல்சியா, 2014-17ம் கல்வியாண்டில் சுதா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையாக வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி சாதனை படைத்துள்ளது.தற்போது தங்கப்பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவி மேரியை கல்லூரி நிறுவனர், தாளாளர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

Tags : St. John's College of Physics ,Veeravanallur ,
× RELATED வீரவநல்லூரில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்த பொதுமக்கள்