×

அகிலாண்டபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி, அக். 18: கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை வகித்த பள்ளிச் செயலாளர் சந்திரசேகர், கண்காட்சியை துவக்கிவைத்துப் பார்வையிட்டார். இதில் மாணவர்களின்  அறிவியல் படைப்புகளை சக மாணவ, மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசு, சான்றிதழ்களை பள்ளி துணைச்செயலாளர் பாண்டியராஜ்   வழங்கினார். இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை தலைமையாசிரியை அமராவதி வழங்கினார்.

Tags : Science Exhibition ,Akhilandapuram School ,
× RELATED வத்திராயிருப்பு பள்ளியில் அறிவியல் கண்காட்சி