×

உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையில் குழப்பம் பெற்றோர்கள் முற்றுகை

உடுமலை, அக். 18:உடுமலை கேந்திரியா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட குழப்பத்தால் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.   உடுமலை ராஜேந்திரா சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட உள்ளது. இப்பள்ளியில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கைக்காக 2500 பேர் விண்ணப்பித்தனர்.ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில் தலா 40 மாணவர்கள் வீதம் மொத்தம் 200 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். ஆனால் அளவிற்கு அதிகாம விண்ணப்பங்கள்் பெறப்பட்டதால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 15ம்  தேதி ஒன்றாம் வகுப்புக்கும், 16ம் தேதி இரண்டாம் வகுப்புக்கும் குலுக்கல் முறை நடந்தது. தொடர்ந்து நேற்று மூன்றாம் வகுப்புக்கு குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால் திடீரென குலுக்கல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளிடம் காரணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் முறையாக பதில்யளிக்காததால் வகுப்பறை முன் திரண்டு பெற்றோர்கள்  முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற உடுமலை போலீசார் பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
 இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது: ‘‘கடந்த இரு தினங்களாக குலுக்கல் நடந்த நிலையில், இன்று (நேற்று) குலுக்கல் நடைபெறவில்லை. இதற்கான சரியான காரணத்தையும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. முன்பே தெரிவித்திருந்தால், பணிக்கு செல்லாமல் இங்கு வந்து காத்திருந்திருக்க மாட்டோம். மாணவர் சேர்க்கை விதிமுறைகளை சரியாக அறிவிப்பதில்லை. பெற்றோருக்கு இதனால் குழப்பம் ஏற்படுகிறது. அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கோட்டாவுக்கு பிறகுதான் மற்ற குழந்தைகளுக்கு அட்மிஷன் கிடைக்கும் என்கின்றனர். 200 இடங்களுக்கு ஏன் 2500 விண்ணப்பங்கள் விநியோகிக்க வேண்டும்? மாணவர் சேர்க்கை விதிமுறைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Udumalai ,Kendriya Vidyalaya ,
× RELATED உடுமலை நகராட்சி கூட்டத்தில் உபரி பட்ஜெட் தாக்கல்