×

சாயம் விற்பனையாளருக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு

திருப்பூர், அக். 18: திருப்பூரில் இயங்கி வரும் 3 சாய ஆலைகளுக்கு சாயங்கள் விற்பனை செய்த வகையில் ரூ.12 லட்சம் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக சாயம் விற்பனையாளர், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் புகார் அளித்துள்ளார்.
 ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி  தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது, ‘‘திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறிதும், பெரிதுமென பின்னலாடை உற்பத்தி சார்ந்த பல ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் ஏற்படும் பிரச்னைகளுக்கு போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் செல்லாமல் இருதரப்புகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் வகையில் ஒரு சில தொழில்துறையினர் இணைந்து ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை ஏற்படுத்தியுள்ளோம்.  இதில் சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், டெக்மா உட்பட 14 சங்கங்கள் இணைந்துள்ளன. குறிப்பாக பணபரிவர்த்தனை, பிற உள்ளூர் ஆடை தயாரிப்பு பிரச்னை மட்டுமன்றி, வெளிநாட்டு வர்த்தக பிரச்னைகளுக்கும், இக்கவுன்சில் மூலம் தீர்வு காணப்படுகிறது.  இந்நிலையில் திருப்பூர், கே.வி.ஆர். நகரை சேர்ந்த சாய விற்பனையாளர் ஒருவர் பல்லடம், லட்சுமி நகர், வீரபாண்டியை சேர்ந்த, மூன்று சாய ஆலை உரிமையாளர்களுக்கு சாயம் விற்பனை செய்துள்ளார். இதற்கான தொகை ரூ.12 லட்சத்தை இந்த மூன்று சாய ஆலை உரிமையாளர்களும் உரிய காலத்தில் கொடுக்கவில்லை. இது குறித்து ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் புகார் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சாய ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர் ஆகியோரை அழைத்து விசாரிக்க இக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : paint vendor ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ