×

போக்குவரத்து பாதிப்பு எடையூர், சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறையினர் டெங்கு தடுப்பு பணி

முத்துப்பேட்டை, அக்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மற்றும் சங்கேந்தி பகுதியில் சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம் காவல்துறை ஆகியவை இணைந்து டெங்கு தடுப்பு தூய்மைப்படுத்தும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முன்னதாக சுகாதாரத்துறை மற்றும் துப்புரவு தொழிலாளர்களுடன் இணைந்து சங்கேந்தி பேருந்து நிலையத்தைச்சுற்றி குவிக்கப்பட்டுள்ள குப்பைகளையும், விளம்பர சுவரொட்டிகளையும் சுத்தம் செய்தனர். பேருந்து நிலையத்தில் உள்ளே பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பொதுமக்களும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இனிவரும் காலங்களில் யாரேனும் பேருந்து நிலையத்திற்கு விளம்பர போஸ்டர் ஒட்டக்கூடாது.

இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது, மீறி அவ்வாறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சங்கேந்தி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் சென்று பரிசோதனை செய்து தேவையற்ற பொருட்களை அகற்றினர். சங்கேந்தி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த கருணாநிதி மகன் ஐயப்பன் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த தெருவில் கொசு மருந்து பிளீச்சிங் பவுடர்தெளித்தும் சுகாதார பணி மேற்கொண்டனர். இதில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் பழனியப்பன், பாஸ்கரன், சப்.இன்ஸ்பெக்டர்தமிழ்ச்செல்வன், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் நாகராஜன், ஊராட்சியை சேர்ந்த மஸ்தூர்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : area ,Sangendi ,
× RELATED வாட்டி வதைக்கும்...