×

நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், அக்.18: திருவாரூரில் நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கு என தனித் துறையை உருவாக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் நெடுஞ்செழியன் தலைமையில் பொறுப்பாளர்கள் வேலாயுதம், முருகானந்தம், சரவணன், பாலு, அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மழை அளவு நேற்று முன்தினம்  இரவு முதல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு: திருவாரூர் 92.2, மன்னார்குடி 59 , நீடாமங்கலம் 40.6 , பாண்டவையாறு தலைப்பு 25. 6,முத்துப்பேட்டை 52, திருத்துறைப்பூண்டி 13.2, நன்னிலம் 21. 2, குடவாசல் 11.2 , வலங்கைமான் 5.2 என மாவட்டம் முழுவதும் 320 .2 மி.மீ மழை பெய்தது. அதன்பின்னரும் இந்த மழை தொடர் மழையாக மாலை வரையில் மாவட்டம் முழுவதும் பெய்தது.

Tags : shop workers union demonstration ,
× RELATED புயல் எச்சரிக்கை நீங்கியதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்