×

மத்திய அரசின் தவறான கொள்கையால் தொழிலாளர் வர்க்கம் வெகுவாக பாதிப்பு

காரைக்கால், அக்.18: மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து இடதுசாரிகள் (மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இணைந்து) காரைக்கால் அரசலாறு பாலம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, வேலையில்லா இளைஞா–்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், ரயில்வே, ஏா் இந்தியா போன்றவற்றை தனியாருக்கு தாரை வாா்க்கும் போக்கை கைவிட்டு, அரசு கூடுதல் நிதி ஒதுக்கி நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி நாட்களை 200 நாட்களாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது தொடர்ந்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் வின்சென்ட் கூறியது :

மத்திய அரசின் தவறான கொள்கையால் நாட்டில் தொழிலாளா் வா்க்கம் வெகுவாக பாதித்துள்ளது. வேளாண்மை மேம்பாட்டுக்கு உரிய கவனம் செலுத்தவோ, சிறப்பு திட்டம் வகுக்கவோ மத்திய அரசால் முடியவில்லை. முந்தைய பாஜக அரசு காலத்தின் நடவடிக்கையாலும், தற்போதைய ஆட்சியின் அவலத்தாலும் நாட்டில் வறுமை, பட்டினியால் மக்கள் அவதிப்படுகிறாா–்கள். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. புதுச்சேரி அரசு மக்களுக்கான இலவச அரிசியை பணமாக இல்லாமல் அரிசியாகவே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அமைப்புசாரா தொழிலாளாகளுக்கு தீபாவளிக்கு முன்பாக வழங்கப்படக்கூடிய சலுகைகளை அடுத்த ஓரிரு நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலா் எஸ்.எம்.தமீம், இந்திய கம்யூனிஸ்ட் காரைக்கால் பிரதேச செயலா் மதியழகன் மற்றும் கட்சிகளைச் சோ்ந்த எஸ்.ஏ.முகம்மது யூசுப், என்.எம். கலியபெருமாள், பாலசுப்ரமணியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags : working class ,government ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...