×

சீர்காழி அருகே தென்னலக்குடியில் மதுபானம் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது

சீர்காழி, அக்.18:சீர்காழி அருகே தென்னலக்குடியில் மதுபானம் கடத்தி வந்த கார் கவிழ்ந்தது. சீர்காழி அருகே தென்னலக்குடி மெயின் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் டாஸ்மார்க் கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து டாஸ்மார்க் கடை எதிரே சாலையோரம் உள்ள வயலில் தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்த மது பிரியர்கள் ஓடிப்போய் தலைகீழாக கவிழ்ந்த காரை பார்த்தபோது, அதில் 48 அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்திவரப்பட்ட மதுபான பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த காரைக்கால் திருநள்ளார் செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : car crashes ,Sirkazhi ,
× RELATED அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது