×

நீலகிரியில் கன மழை விவசாய நிலங்களில் புகுந்த தண்ணீர்

ஊட்டி,  அக்.18: நீலகிரி  மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில்  பல மணி நேரம் இடியுடன் கூடி கன மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு 7  மணிக்கு துவங்கிய கன மழை அதிகாலை 3 மணி வரை கொட்டியது. மஞ்சூர் மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் ஊட்டி - மஞ்சூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. மைனலை மட்டம்-குந்தா இடையே பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது.  அதேபோல், ஊட்டி அருேகயுள்ள கேத்தி பகுதியிலும் பல இடங்களில்  சாலைேயாரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஊட்டி-இத்தலார்  சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலை முழுக்க சேறும் சகதியுமாக  மாறியுள்ளது. குன்னூர் - கைகாட்டி சாலையிலும் சில இடங்களில்  லேசான மண் சரிவு ஏற்பட்டது. கேத்தி  மற்றும் முத்தோரை பாலாடா போன்ற பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய  நிலங்களில் மழை நீர் புகுந்து தேங்கி நின்றது.
இதனால், விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.கன  மழை பெய்யத்துவங்கியுள்ளதால், சாலையோரங்களில் பல இடங்களில் புதிதாக  நீரோடைகள் முளைத்துள்ளன.

இவைகளில் பெரும்பாலான நீரோடைகளில் இருந்து வரும்  தண்ணீர் சாலைகளில் ஓடுவதால் சாலை பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரியில் தொடர்ந்து ஓரிரு நாட்கள் கன மழை பெய்தால் பல்வேறு பகுதிகளிலும்  நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மற்றும்  நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு  செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. மழை அளவுநேற்று முன்தினம்  நீலகிரியில் பெய்த மழையின் அளவு மிமீ.,ல்: ஊட்டி 15.2, நடுவட்டம் 4,  கல்லட்டி 5, கிளன்மார்கன் 7, குந்தா 48, அவலாஞ்சி 38, எமரால்டு 31, கெத்தை  34, கிண்ணக்கொரை 33, அப்பர்பவானி 28, குன்னூர் 47, கேத்தி 56, பர்லியார்  மற்றும் கோத்தகிரி 42, கோடநாடு 18, கூடலூர் 3, தேவாலா 6மிமீ மழை பதிவாகியுள்ளது.

Tags : land ,Nilgiris ,
× RELATED நீலகிரியில் 7 நாட்களில் 14 ஆயிரம் மி.மீ., மழைப்பதிவு