×

பந்தலூர் அரசு பள்ளியில் இயற்கை பேரிடர் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பந்தலூர், அக்.18: பந்தலூர் அரசு பள்ளியில் இயற்கை பேரிடர் மேலாண்மை  குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பந்தலூர் தீயணைப்பு துறை, வருவாய்துறை மற்றும் கல்வித்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சித்தானந்த் முன்னிலை வகித்தார். கூடலூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சங்கர் மற்றும் ராஜகோபால் ஆகியோர் கலந்துகொண்டு மழை வெள்ளம் மற்றும் பேரிடர் ஏற்படும் நேரங்களில் நாம் எவ்வாறு செயல்பட்டு உதவுதல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், தீ விபத்து மற்றும் கேஸ் சிலிண்டர் பாதிப்புகள் ஏற்படும்போது எவ்வாறு எதிர்கொண்டு காப்பாற்றுவது, தீபாவளியின்போது பட்டாசுகள் வெடிக்கும் போது எதிர் பாராதவிதமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும் மாணவர்கள் மத்தியில் விளக்கம் மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பந்தலூர் துணை வட்டாட்சியர் நடேசன், முதுநிலை உதவியாளர் செந்தில்குமார், ஆர்ஐ காமு தீயணைப்பு துறை ஊழியர்கள் ஜாபர்அலி, ரவீந்திரன், கார்த்திக், சதீஸ் மற்றும் ஆசிரியர்கள் தண்டபாணி, ஸ்டீபன்சன் நந்தகோபால் மற்றும் ஏராளமான  மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags : disaster ,Bandalur Government School ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...