×

குளித்தலை எழுநூற்றுமங்கலத்தில் தெரு விளக்குகள் எரியாததால் இருளில் தவிக்கும் கிராம மக்கள்

குளித்தலை: குளித்தலை ஒன்றியம் மணத்தட்டை ஊராட்சி எழுநூற்றுமங்கலத்தில் 3 மாதமாக தெரு விளக்குகள் எரியாததால் கிராம மக்கள் இருளில் தவி்த்து வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் மணத்தட்டை ஊராட்சி எழுநூற்று மங்கலம் குடி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தெருக்களில் 16 மின் கம்பங்களும், பெண்கள் பொது கழிப்பிடத்தில் 4 மின் கம்பங்களும் உள்ளன.

இந்த மின் கம்பங்களில் உள்ள விளக்குகள் கடந்த 3 மாதமாக இரவு நேரங்களில் எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியில் சென்று வர முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அதேபோல் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சத்துடன் இரவு நேரத்தை கழித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து இருளில் மூழ்கி இருக்கும் எழுநூற்று மங்கலம் குடியிருப்பு பகுதியில் தெரு மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bathing ground ,
× RELATED விழுப்புரத்தில் கொரோனா அச்சமின்றி...