×

காட்டேரி ேடம் சாலையில் மண் சரிவால் விபத்து அபாயம்

ஊட்டி, அக்.18: ஊட்டி அருகே கேத்தி பாலாடா-காட்டேரி டேம் இடையே தூரட்டி சந்திப்பு அருகே சாலையோரம் இடிந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.ஊட்டி அருகே கேத்தி பாலாடா கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் வசிக்க கூடிய மக்களின் பிரதான தொழில் காய்கறி விவசாயம் ஆகும். இங்கு பல ஏக்கர் பரப்பளவில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இக்கிராம மக்கள் குன்னூர், ேமட்டுபாளையம் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு செல்ல காட்டேரி டேம், கெந்தளா, சேலாஸ் சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனர். காய்கறி ஏற்றி செல்லும் லாரிகளும் இச்சாலை வழியாகவே சென்று வருகின்றன. இந்நிலையில் கேத்தி பாலாடா-காட்டேரி டேம் இடையே தூரட்டி சந்திப்பு அருகே இன்டர்லாக் கற்கள் அமைக்கப்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் இன்டர்லாக் கற்கள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. மேலும் சாலை சேதமடைந்து வருவதால் விபத்து ஏற்பட கூடிய அபாயமும் நீடிக்கிறது. எனவே சாலை சேதமடைந்த பகுதியில் தடுப்புசுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்