ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கரூர், அக்.18: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக முகிலன் வழக்கு நவம்பர் 5ம்தேதிக்கு ஒத்தி வைத்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுற்றுச்சூழல் இயக்க ஒருங்கிணைப்பாளரும், காவிரிஆறு பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான முகிலன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கு விசாரணைக்காக, கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் திருச்சி சிறைக்கு கொண்டு சென்றனர்.

Tags : Advisory Meeting ,
× RELATED அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்