×

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக முகிலன் மீதான வழக்கு நவ.5க்கு ஒத்திவைப்பு ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களுக்கு வரவேற்பு

கரூர்: கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்துக்கு கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தும் வகையிலும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 2.50 கோடி அல்லது உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம், இதில் எது குறைவானதோ அதை வழங்கலாம் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் வரவேற்கப்படுகின்றனர். இந்த சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் ஒரு சிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு முதலீட்டாளரும் அந்த சிறப்பு நோக்க முகமையில் அங்கம் வகிக்கவும், அதற்கான தனது பங்கினை அளிக்கவும் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும். இந்த ஜவுளி பூங்காக்கள் குறைந்த பட்சம் 3 தொழில்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. நிலம், தொழிற்சாலை கட்டிடம், இயந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மானியம் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும். பூங்காவின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். சிறப்பு முகமையில் அரசின் பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த சிறப்பு முகமை ஒவ்வொரு முறையும் மானியம் விடுவிக்க கோரிக்கையினை சமர்ப்பிக்கும் போது, தொடர்புடைய ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்த பத்திரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஜவுளி பூங்காவின் முன்னேற்றம் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் தொடர்ந்து கண்காணித்து வருவார். திட்டப்பணிகளை முடிக்கும் முன்பே திட்டப்பணியில் இருந்து எந்த சிறப்பு நோக்க முகமையாவது விலக நேரிடின், அந்த காலக்கட்டம் வரை பெற்ற மாநில அரசு மானியத்தை அதற்கான வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். வட்டி சதவீதத்தை திட்ட அங்கீகாரக்குழு நிர்ணயிக்கும். எனவே தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயககுநர் விஜயலட்சுமி உட்பட முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Mukhilan ,Indian ,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்