கஞ்சா விற்ற முதியவர் கைது

கோவை, அக்.18: கோவை சாயிபாபா காலனி போலீசார் நேற்று முன்தினம் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சாயிபாபா காலனி பெரியார் நகரை சேர்ந்த அப்துல்காதர்(69) என்ற அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கஞ்சா விற்றவர் கைது