×

விராலிமலை அரசு பள்ளியில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு ஒத்திகை

விராலிமலை, அக்.17: புதுக்கோட்டை மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் தாலுகா பேரிடர் மேலாண்மை முகமையின் சார்பில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினம் விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் டெய்சிகுமார் தலைமையில் மதர்தெரசா கல்விக்குழும தாளாளர் உதயக்குமார் தொடங்கி வைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் மாதிரி ஒத்திகையின் போது இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்( பொறுப்பு) மகேந்திரன் பேசியதாவது: பேரிடர் மேலாண்மை மற்றும் இயற்பை இடர்பாடுகள் குறித்து விழிப்புணர்வு செயலியான டிஎன்-ஸ்மார்ட் ஆப்-ஐ அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும்.மேலும் சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், புயல், காட்டுத் தீ, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். புயல் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. நிலநடுக்கம் ஏற்படும் பொழுது கட்டிடத்தை விட்டு திறந்த வெளிக்கு ஓடி வந்திட வேண்டும் என்றார்.

பேரிடர் காலங்களில் உயிர்சேதம் பொருட்சேதம் ஏற்படாமல் தடுப்பது குறித்து இலுப்பூர் தாலுகா தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர்கள் மாரியப்பன், தவமணி, கருப்பசாமி, அருண்பாண்டியன், அருண்பாண்டியன், ரகுநாத் உள்ளிட்ட பலர் மாணவர்களிடம் ஒத்திகை செய்து காட்டினர்.
விராலிமலை தாசில்தார் சதீஷ்குமார், கவரப்பட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், பள்ளித் துணை ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விராலிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் செய்திருந்தார்.

Tags : Viralimalai Government School ,
× RELATED விராலிமலை அரசு பள்ளியில்மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி