தஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

தஞ்சை, அக். 17: தஞ்சை வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது. மேலும் அன்று 12 மணிக்கு ஊனமுற்றோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். ஊனமுற்றோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊனமுற்றோர் பங்கேற்று கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.இவ்வாறு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,peasants ,asylum seekers ,
× RELATED அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்