×

சர்வதேச பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு பேரணி

பாபநாசம், அக். 17: பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாலியமங்கலம் மெயின் சாலை வழியாக சென்று தனியார் பெட்ரோல் பங்க் அருகில் பேரணி முடிவடைந்தது. பேரணியை பாபநாசம் தாசில்தார் கண்ணன் துவக்கி வைத்தார். பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், துணை தாசில்தார் விநாயகம், கணேசன், பள்ளி தலைமையாசிரியர் சந்திரன், தீபக், ஆர்ஐக்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


Tags :
× RELATED ஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை...