×

கபடி போட்டி வேப்பங்குளம் அணி வெற்றி

பட்டுக்கோட்டை, அக். 17: பட்டுக்கோட்டை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தில் கபடி போட்டி நடந்தது.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் தலைமை வகித்தார். போட்டியை திரைப்பட நடிகர் விமல், திரைப்பட இயக்குனர் சற்குணம், காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியில் பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 28 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் வேப்பங்குளம் மற்றம் பள்ளத்தூர் அணிகள் மோதின.  இதில் வேப்பங்குளம் அணியினர் 14 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு, சுழற்கோப்பையை திரைப்பட தயாரிப்பாளர் துரைசுதாகர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் வழங்கினர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.


Tags : team ,Kabaddi Match Vepamkulam ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா