×

கரும்புகையால் பொதுமக்கள் அவதி ஒர்க்ஷாப்பை இடமாற்றம் செய்ய கேட்டு மனு

திருப்பூர், அக். 17: ஒர்க்ஷாப்பில் இருந்து வெளியாகும் கரும்புகையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்த ஒர்க்ஷாப்பை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 1வது வார்டுக்குட்பட்ட தண்ணீர் பந்தல் காலனி கிழக்கு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று 1வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் குடியிருக்கும் பகுதியில், வாகனங்கள் பழு பார்க்கும் ஒர்க்ஷாப் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதில் கனரக வாகனங்கள் பழுது பார்ப்பதால் கடுமையான கரும்புகை எங்கள் குடியிருப்புக்குள் வருகிறது. மேலும் அங்குள்ள கழிவுகளை எரிப்பதாலும் புகை வெளியாகி வருகிறது. இதில் வாகனங்கள் சத்தம் இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். சிலருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர்.  

இது குறித்து ஒர்க்ஷாப் உரிமையாளரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. தற்போது இரவு நேரங்களிலும் அவர்கள் பணியை தொடர்வதால், குழந்தைகள் படிப்பையும், தூக்கத்தையும் கெடுத்து வருகிறார்கள். எனவே ஒர்க்ஷாப்பை வேறு இடத்திற்கு மாற்றம் ெசய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் வாசுக்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags : relocation ,Avadi Workshop ,
× RELATED எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங் இடமாற்றம்