×

திருச்சி கோர்ட் அளித்த கஸ்டடி உத்தரவு நகல் பெங்களுரூ சிறைக்கு அனுப்பி வைப்பு நகை கொள்ளையன் முருகனிடம் விரைவில் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி

திருச்சி, அக். 17: நகை கொள்ளையன் முருகனிடம் திருச்சி தனிப்படை விசாரிக்க ஏதுவாக திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி கடித நகல் பெங்களூரு சிறையில் அளிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள், பொருட்கள் வாங்க மக்கள் மெயின்கார்கேட் பகுதிகளில் குவிவார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசலாக காணப்படும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி திருச்சி என்எஸ்பி ரோடு, தெப்பக்குளம் அருகே தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார். இதில் துணை கமிஷனர் நிஷா, மயில்வாகனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கமிஷனர் அமல்ராஜ் அளித்த பேட்டி: தீபாவளி பண்டிக்கைக்காக என்.எஸ்.பி ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் 200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். நகை கடையில் நடந்த கொள்ளையில், கொள்ளையர்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளனர்.

கடை முன், பின் காம்பவுண்ட் இருந்ததால் கொள்ளையர்கள் சுவரில் ஓட்டை போட்டு சென்றது யார் பார்வைக்கும் தெரியாமல் போனது. இதில் நேரடியாக மூன்று பேரும், மறைமுகமாக சிலரும் ஈடுபட்டுள்ளனர். இந்த குற்றத்துக்கு தண்டனை பெற்று தரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் விசாரணையை முடித்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தருவோம்.இவர்கள் திருச்சி பஞ்சாப் நேசனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். வேறு சில வழக்குகளிலும் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருகிறோம். பெங்களூரு போலீசார் கோர்ட் உத்தரவின்படி முறையாக வந்துதான் முருகனை 6 நாள் கஸ்டடி எடுத்துச்சென்றனர். பெங்களூருவில் முருகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. நாங்களும் முருகனை கஸ்டடி எடுக்க திருச்சி ேஜ.எம். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றுவிட்டோம். அந்த கடித நகலை கர்நாடகா பரப்பனஅக்ரஹாரா சிறையில் அளித்து விட்டோம். விரைவில் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளோம்.பெங்களூர் போலீசாருக்கும், திருச்சி போலீசாருக்கும் எந்தவித மனஸ்தாபமும் இல்லை. பெங்களூரு காவல் துறையினர் திருச்சி தனிப்படை காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கினர். நாங்களும் அதுபோல் ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் சட்டப்படியே திருச்சியில் முருகன் மறைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு சென்றனர். முருகனிடமிருந்து இன்னும் 100 சதவீதம் நகைகள் கைப்பற்றப்படவில்லை. மீதி நகைகள் எங்கே உள்ளது என முருகனை கஸ்டடி எடுத்து விசாரித்ததால் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

200 சிசிடிவி கேமராக்கள்
திருச்சியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் விதமாக 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் போலீசார் பைனார்குழல மூலம் கண்காணிப்பார்கள். 200 சிசிடிவி கேமராக்கள், 2 மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 4 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் 7 குழுக்களாக கண்காணிப்பார்கள். 100 குற்றப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவார்கள். போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுகின்றனர்.



Tags : Murukan ,court ,Trichy ,
× RELATED திருச்சி கிராமத்தில் செயல்படும்...