×

மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 19ம் தேதி நடக்கிறது

திருச்சி, அக்.17: மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.காஸ் நுகர்வோர்களுக்கான சிலிண்டர் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு டிஆர்ஓ சாந்தி தலைமையில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன காஸ் முகவர்கள், மேலாளர்கள் மற்றும் காஸ் வாடிக்கையாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.இக்கூட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி பகுதிகளில் காஸ் நுகர்வோர் மறுநிரப்பு பதிவு செய்து பெறுவதில் காலதாமதம், முறைகேடுகள், குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காஸ் முகவர்களின் தாமதப்போக்கு ஆகிய குறைகள் தொடர்பான புகார்கள் மனுக்கள் மூலம் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : Cass Consumer Oversight Meeting ,Manapparai Taluk Office ,
× RELATED புதுக்கோட்டையில் 26ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்