×

இலவச பஸ் பாஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

முசிறி, அக்.17: முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 31ம்ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கருப்பண்ணன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக தமிழ்சங்கத்தின் முசிறி செயலாளர் நித்யானந்தம், ஓய்வு கருவூல அலுவலர் சிவசண்முகம், ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்தும், ஓய்வூதியர்களின் நலன் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு கைவிடவேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளில் பாரபட்சமின்றி காப்பீட்டு சிகிச்சை திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டத்தை உடன் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் கவுரவ தலைவர் ராமசாமி உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Pensioners ,
× RELATED ஓய்வூதியர் சங்க கூட்டம்