×

திருச்சி பாரதியார் சாலையில் நடை பாதையை ஆக்கிரமித்து கைவினை பொருட்கள் கடை

திருச்சி, அக்.17: திருச்சி பாரதியார் சாலையில் பூமாலை வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவிக்குழுகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் என பெண்கள் பயன் பெறும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் நேரடி பார்வையில் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் டீக்கடை, ஜெராக்ஸ், டிபன் கடை, கைவினை பொருட்கள், வண்ண மீன் விற்பனை கடை உள்பட பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. மேலும் இந்த சாலையில் மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், விஏஓ அலுவலகங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இருப்பதால் பொதுமக்களுக்கான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த நடைபாதையை தனி நபர் ஆக்கிரமித்து கைவினைப் பொருட்கள் கடையை அமைத்துள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : handicrafts shop ,walkway ,Trichy Bharathiar Road ,
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...