×

கோவை ஏல மையத்தில் தேயிலை தூaள் விலை தொடர் சரிவு

கோவை, அக்.17: கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் தேயிலை தூள் விலை கிலோவுக்கு ரூ.1.6 காசுகள் குறைந்த நிலையில், நேற்று நடந்த ஏலத்தில் மீண்டும் 42 காசுகள் விலை குறைந்துள்ளது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் தேயிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏல தாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். அதன்படி, தேயிலை வர்த்தக மையத்தில் ஏலம் நடைபெற்றது. அதன் விவரம் பின்வருமாறு: இந்த ஏலத்திற்கு இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 476 கிலோ தேயிலை தூள் வந்தது. இதில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 242 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 84 சதவீதம் ஏலம் போனது. இதில் 54 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கிலோ தேயிலை தூள் 95.97 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 96.39 அதன்படி கிலோவுக்கு 42 காசுகள் விலை குறைந்துள்ளது. இதே போல் கடந்த 9ம் தேதி நடந்த ஏலத்திலும் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.1.6 காசுகள் விலை குறைந்திருந்தது.
இதேபோல், இலை ரக தேயிலை 1 லட்சத்து 17 ஆயிரத்து 183 கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில் 56 ஆயிரத்து 878 கிலோ ஏலம் போனது. இது 49 சதவீதம் ஆகும். இதில் 34 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.93.93க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.91.90க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.2.3 காசுகள் விலை அதிகரித்துள்ளது. ஏலத்தின் படி, மொத்தமாக 2 லட்சத்து 53 ஆயிரத்து 120 கிலோ தேயிலை தூள் மற்றும் இலை ரக தேயிலை ஆகியவை ரூ.2 கோடியே 41 லட்சத்து 75 ஆயிரத்து 895க்கு ஏலம் போனது.

Tags : Coimbatore Auction Center ,
× RELATED கோவை ஏல மையத்தில் இலை ரக தேயிலை விலை குறைந்தது