×

கலந்துகொண்டனர். வெளியூர் சென்ற கணவர் மாயம்

ஈரோடு, அக்.17:ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (57). இவரது மனைவி மோகனேஸ்வரி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புஷ்பராஜ், தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து வருகிறேன் என மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின், புஷ்பராஜ் வீடு திரும்பவில்லை.
மனைவி மோகனேஸ்வரி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான புஷ்பராஜை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மீண்டும் வெளியே வராததால் மர்மம்...