×

காவலர் நல அங்காடி பட்டாசுக்கடை மாவட்டத்தில் 3 இடங்களில் துவக்கம்

ஈரோடு, அக்.17: காவலர் நல அங்காடி பட்டாசுக்கடை மாவட்டத்தில் 3 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக காவலர் நல அங்காடி பட்டாசுக்கடை அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்படும். அதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காவல் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் காவலர் நல அங்காடி பட்டாசுக்கடை துவங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்ட ஆயுதப்படை போலீசார் சார்பில் ஈரோடு எஸ்பி அலுவலக பின்புறம் நேற்று முதல் பட்டாசுக்கடை துவங்கப்பட்டுள்ளது. இந்த காவலர் பட்டாசுக்கடையில் வெளி மார்க்கெட்டை விட குறைந்த விலையில் 23 வகையான பட்டாசு பாக்ஸ்கள் ரூ.310 முதல் ரூ.3,750 வரை விற்பனை செய்யப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசுகள் விற்பனை செய்யப்படும்.
இந்த கடையின் விற்பனையாளராக ஆயுதப்படையை சேர்ந்த 4 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டாசு கடையில் சிசிடிவி கேமராவும், இரவில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதேபோல் கோபி, சத்தியமங்கலம் பகுதியிலும் காவலர் நல அங்காடி பட்டாசுக்கடை துவங்கப்பட்டுள்ளது.இந்த பட்டாசுக்கடையில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பட்டாசு வாங்கி கொள்ளலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்பி சக்திகணேசன் அறிவுறுத்தலின் பேரில் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை சார்பில் பட்டாசுக்கடை நடத்துவதற்கான உரிமம் பெறப்பட்டு நேற்று காலை சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே கடை திறக்கப்பட்டது. சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மலிவு விலையில் கிப்ட் பாக்ஸ் விற்பனைக்கு உள்ளதாகவும், இதில் காவல்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும் பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விழாவில், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார்

Tags : Guard Welfare Store ,locations ,district ,Pattukkudai ,
× RELATED மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ்...