×

ஈரோட்டில் பரவலாக மழை

ஈரோடு, அக். 17: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. மதியம் சுமார் 1 மணியளவில் லேசான தூரலுடன் பெய்த மழை, பலத்த மழையாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. பின்னர், லேசாரன சாரல் மழையாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சாக்கடைகளில் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் திட்டப்பணிகள் நடந்து வரும் பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக காணப்பட்டது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடர் மழையால், ஈரோடு மாநகரில் நேற்று குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இதேபோல், பெருந்துறை மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில்  தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈரோடு பி.பெ. அக்ரஹாரம், வெண்டிபாளையம் தடுப்பணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : rainfall ,Erode ,
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உயிருக்கு போராடும் யானை..!!