×

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.17: மத்திய அரசின் மந்தமான பொருளாதார நடவடிக்கைகளை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்ப லூர், ஆலத்தூர் வட்டச் செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி பணம் ரூ1.76 லட்சம் கோடியை பொதுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக மாற்றியமைக்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

முதியோர், விதவை ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் மந்தமான பொருளாதார போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். இதில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மணிவேல், ரமேஷ், ஜெயராமன், அகஸ்டின், கலையரசி, ராஜேந்திரன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,government ,Perambalur ,
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...