×

காந்தி பிறந்த நாளையொட்டி தூய்மை இந்தியா பாதயாத்திரை

ஜெயங்கொண்டம், அக். 17: காந்தி பிறந்த நாளையொட்டி ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை இந்தியா பாதயாத்திரை நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், இணை பொறுப்பாளர் இலகண்ணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்பி இல.கணேசன் பங்கேற்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியானது காந்தி பூங்காவில் துவங்கி நான்கு ரோடு வழியாக, திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் ஜெயங்கொண்டம் நகரின் எல்லை வரை சென்று முடிவடைந்தது.

பாதயாத்திரையில் மத்திய அரசு வக்கீல் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி பிரிவு தலைவர் சசிக்குமார், நகர தலைவர்கள் ஜெயங்கொண்டம் ராமர், தா.பழூர் அரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், ராமலிங்கம் மற்றும் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் ஐயப்பன் செய்திருந்தார்.

Tags : Birthday ,Gandhi ,
× RELATED கடையம்,பொட்டல்புதூரில் இந்திரா காந்தி பிறந்த நாள்