மாவட்ட அளவிலான மேஜை பந்து போட்டி

அருப்புக்கோட்டை, அக். 17: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான மேஜைப்பந்து போட்டி நடைபெற்றது. கல்லூரிச் செயலாளர் பாஸ்கரராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஒன்றையர் பிரிவில் எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தோஷ், மற்றும் வினோத்கண்ணா, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவி விஜயபிரபா, விஎஸ்கேடி குருகுலம் மேல்நிலைப்பள்ளி தினேஷ், எஸ்பிகே லயன்ஸ் மேல்நிலைப்பள்ளி சிவானிகா, சத்திரியப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விமலரசி  முதலிடம் பெற்றனர்.இரட்டையர் பிரிவில் எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரதீபா மற்றும் பவித்ரா, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி விஜயபிரபா மற்றும் தர்ஷினி, விஎஸ்கேடி குருகுலம் மேல்நிலைப்பள்ளி தினேஷ், மெர்ரிக், ஒய்.ஆர்.டி.வி மேல்நிலைப்பள்ளி ஜெயபாஷ், ஜெயரோம் முதலிடம் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை மேஜைப்பந்து அகாடமி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED டூவீலரில் சென்றவரை படுகொலை...