×

தரமில்லாமல் சமைப்பதால் குப்பையில் கொட்டப்படும் ‘அம்மா உணவக’ உணவுகள்

விருதுநகர், அக். 17: விருதுநகரில் அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகள் தரமின்றி இருப்பதால், குப்பையில் கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் ரயில்வே பீடர் ரோடு மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள் நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலையில், இட்லி ஒரு ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் விற்பதால், ஏற்படும் இழப்பு நகராட்சி மூலம் ஈடு செய்யப்படுகிறது. அந்த வகையில் விருதுநகர் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகிறது. இந்நிலையில், அரசு தலைமை மருத்துவமனை அம்மா உணவகம் விற்பனை நல்ல நிலையில் இருப்பதாகவும், ரயில்வே பீடர் உணவகத்தில் இட்லி, சாம்பார் தரமின்றி இருப்பதால் சாப்பிட வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தினசரி சமைக்கப்படும் இட்லி மற்றும் சாத வகைகள் குப்பையில் கொட்டி வீணடிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் அம்மா உணவங்களின் தரம் மற்றும் விற்பனையை தினசரி கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி