×

சாலைப் பணிக்கு பூமி பூஜை பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டிய பலே கொள்ளையன் கைது 68 பவுன் நகை மீட்பு

அருப்புக்கோட்டை, அக். 17: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவர் கொடுத்த தகவலின்பேரில், 68 பவுன் நகையை மீட்டனர்.
அருப்புக்கோட்டை அருகே, பாலையம்பட்டியை சேர்ந்தவர் முருகபூபதி (54). இவர் தனது நண்பர் பாண்டியராஜனுடன் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை தண்ணீர் கேன் சப்ளை செய்ய டூவீலரில் இருவரும் அருப்புக்கோட்டையில் இருந்து, பந்தல்குடி சென்றனர். அம்மா சிறுவர் பூங்கா பகுதியில், முருகபூபதி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர், கத்தியை காட்டி மிரட்டி முருகபூபதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினார்.

அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மர்மநபரை துரத்தி பிடித்து , பந்தல்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் சேலம் மாவட்டம் கல்லங்குறிச்சி சரவணாநகரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பதும், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், காரியாபட்டி என தமிழகம் முழுவதும் திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் இவர் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி முத்தையாபுரம் சுனாமி காலனியில் வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 68 பவுன் நகையை பறிமுதல் ெசய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : robber ,Bale ,places ,
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்