×

வடமாநிலங்களில் மழையால் பாதிப்பு உளுந்து, வத்தல் விலை கிடுகிடு எள்பிண்ணாக்கு விலையும் உயர்ந்தது போக்குவரத்து பணிமனையில் ஆய்வு

ராஜபாளையம், அக். 17: ராஜபாளையத்தில் டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் திரையரங்குகள், கட்டிடப்பணிகள் நடக்கும் இடங்கள் மற்றும் பொதுமக்கள்  கூடும் இடங்களில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுப்புறம் தூய்மையாக வைக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது குறித்து நோட்டீஸ் வழங்கினர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘மழை காலங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வணிக நிறுவனங்களைப் போல, குடியிருப்புப் பகுதிகளிலும் ஆய்வுப் பணி தொடரும் என்றனர்.

Tags : Northern Territory ,
× RELATED திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்.பி பிரசாரம்