×

இலக்கை நோக்கி பாய்ச்சல்... புறநகர் வழியாகச் சென்று விருதுநகரை புறக்கணிக்கும் அரசு விரைவு பஸ்கள் நகருக்குள் வராததால் பயணிகள் அவதி

விருதுநகர், அக். 17: விருதுநகர் வழியாகச் செல்லும் அரசு விரைவு பஸ்கள், நகருக்குள் வராமல், புறநகர் வழியாகச் செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, விருதுநகர் வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும், நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க நிரந்தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  விருதுநகரின் வடக்கே திண்டுக்கல், பழனி, திருப்பூர், திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் நகரங்களுக்கும், தெற்கே கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய நகரங்களுக்கு விருதுநகரில் இருந்து பஸ்வசதி கிடையாது.ஆனால், மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் விருதுநகரின் புறநகர் பகுதி வழியாக சென்று வருகின்றன. ஆனால், நகருக்குள் பஸ்கள் வருவதில்லை. நகரைச் சேர்ந்த பயணிகளை ஏற்றி, இறக்குவதில்லை. விருதுநகரைச் சேர்ந்த வணிகர்கள், பொதுமக்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு சென்று வரும் நிலையில், விருதுநகர் வழியாகச் செல்லும் பஸ்களில் ஏறி விருதுநகருக்கு டிக்கெட் கேட்டால் டிக்கெட் தர மறுக்கின்றனர். அதையும் மீறி ஏற்றப்படும் பயணிகள் தெற்கே கலெக்டர் அலுவலகம், வடக்கே அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இறக்கி விடப்படுகின்றனர். விருதுநகரைச் சேர்ந்த பயணிகள் பஸ்களில் ஏறி டிக்கெட் எடுப்பதற்கு முன்பாக பெரிய போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை தொடர்கிறது.

நகருக்குள் வந்து செல்வதென்றால் 5க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ்சை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஸ்பீடு பிரேக்கர்கள் இருப்பதாக கூறி பஸ்கள் வர மறுத்தன. இதையடுத்து, அனைத்து பஸ்களும் புதிய பஸ்நிலையம் வந்து செல்லும் வகையில், நான்குவழிச்சாலையில் இருந்து எம்ஜிஆர் சாலை போடப்பட்டது. ஆனால், அந்த சாலை வழியாகவும் வருவதில்லை. இது குறித்து முன்னாள் நகர்மன்ற தலைவர் பாலகிருஷ்ணசாமி கூறுகையில், விருதுநகருக்குள் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அரசு போக்குவரத்து கழக தலைவர், போக்குவரத்து துறை செயலர் ஆகியோரிடம் கடந்த ஆக.29ல் நேரில் மனு அளித்தோம். அவர்களும் மதுரை கோட்ட நிர்வாக இயக்குநரை போனில் அழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் எந்த மாவட்ட தலைநகருக்கு டிக்கெட் தரமறுக்கும் அவலநிலை இல்லை. விருதுநகர் பயணிகளுக்கு மட்டும் டிக்கெட் தர மறுக்கு அவலநிலை தொடர்கிறது. விருதுநகர் மக்கள் நகரில் இருந்து எந்த புதிய வழித்தடமும் கேட்கவில்லை. விருதுநகர் வழியாக செல்லும் பஸ்களில் பயணம் செய்யும் உரிமையை கேட்கின்றனர். அதிகாரிகள் உறுதியான உத்தரவுகளை பிறப்பிக்க மறுப்பது வேதனையாக உள்ளது’ என்றார்.

Tags : destination ,Passengers ,government ,suburbs ,city ,Virudhunagar ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...