×

விளைச்சல் அதிகரிப்பால் விழுந்தது வெங்காயம் விலை

கூடலூர், அக். 17: கூடலூர் பகுதியில் வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலூர் விவசாய நிலப்பகுதிகளான காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, தம்மணம்பட்டி, கழுதைமேடு, சரித்திரவு, பளியன்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து உள்ளனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் வெங்காய சாகுபடி அதிகளவு செய்து வருகின்றனர். தற்போது வெங்காய அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் விளைச்சல் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதும், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்க
வில்லை.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 250 கிராம் விதை தேவைப்படுகிறது. நடவு செய்த நாளில் இருந்து 90 நாட்களில் வெங்காயம் அறுவடை தொடங்கிவிடும். தற்போது கூடலூர் பகுதியில் வெங்காய அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைச்சல் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளதால் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் 1 கிலோ முதல்தர வெங்காயம் ரூ.25க்கு கொள்முதல் செய்கின்றனர். ஆனால் கடந்த மாதம் 1 கிலோ வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?