×

நோயாளிகள் வலியுறுத்தல் சின்னமனூரில் பாதியில் நின்ற கால்வாய் தூர்வாரும் பணி மக்கள் கடும் அதிருப்தி

சின்னமனூர், அக்.17: பி.டி.ஆர் கால்வாய் தூர்வாரும் பணி அரைகுறையாக நிற்பதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சின்னமனூர் 3, 4வது வார்டுகளுக்கு இடையில் பிடிஆர் கால்வாய் 3 கிலோ மீட்டர் தூரம் கடக்கிறது. இந்த கால்வாயில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு படுமோசமாக கிடந்து வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற கொடிய நோய்களை உருவாக்கி வருகிறது. இது குறித்து பொதுமக்கள் சின்னமனூர் நகராட்சியிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக நோய்களை பரப்பி கொண்டிருக்கும் பிடிஆர் கால்வாயில் ஜேசிபி இயந்திரத்தை உள்ளே இறக்கி தூர்வாரும் பணியினை ெதாடங்கினர். 3வது நாளான நேற்று பணிகள் செய்யாமல் நிறுத்தி விட்டனர். எனவே ஏமாற்றும் வகையில் பணிகள் நடப்பதாக மக்கள் புலம்புகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், நோய்களை பரப்பி கொண்டிருந்த நிலையில் கால்வாயை சுத்தப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. பிடிஆர் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் அறிவிப்பு வெளியிட உள்ள நிலையில் ஏதோ உப்பு சப்பாக இரண்டு நாட்கள் தூர்வாரப்பட்டது. தற்போது பணிகள் பாதியில் நிற்கிறது. பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : Chinnamanur ,canal ,
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி