×

மாவட்ட இறகு பந்து போட்டி தொண்டி அணி வெற்றி

தொண்டி, அக். 17: மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் தொண்டி அணியினர் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு தொண்டி ஸ்போர்ட் கிளப் சார்பில் பாராட்டு நடைபெற்றது.
ராமநாதபுரம் இறகு பந்து கழகத்தின் சார்பில் ராமநாதபுரத்தில் 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதியிலிருந்து 68 அணிகள் பங்கேற்றது. இதில் இரட்டையர் பிரிவில் தொண்டி சாதிக் பாட்சா, அஷ்ரப் அணியினர் இரண்டாம் இடத்தையும், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் தொண்டி சாதிக் பாட்சா சசி அணியினர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு தொண்டி ஸ்போர்ட் கிளப் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமுமுக செயலாளர் பட்டாணி மீரான் பரிசுகளை வழங்கினார். ராமநாதபுரம் இறகு பந்து கழக செயலாளர் பிரபாகரன், துணை தலைவர் அசாக் குமார், வள்ளல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tournament ,District Feather Ball ,Team ,
× RELATED சில்லி பாயின்ட்…