×

பிரேக் டவுனாகி நடுவழியில் நிற்கும் அரசு பேருந்துகளால் பயணிகள் அவதி மனஉளைச்சலில் டிரைவர்,கண்டக்டர்கள்

பரமக்குடி, அக்.17:  பரமக்குடி பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நிற்பதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பேருந்து ஓட்டுனர், நடத்துனரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
காரைக்குடி தமிழ்நாடு போக்குவரத்து மண்டலத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்ட நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் 10 ஆண்டுகளில் மாற்றப்பட வேண்டும், ஆனால் 10 ஆண்டுகளை தாண்டியும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமங்களுக்கு செல்லும் புறநகர் பேருந்துகள் கண்ணாடி உடைந்தும், இருக்கைகள் சேதமடைந்த நிலையில் சென்று வருகிறது. பேருந்து இயக்கப்படுவதை தவிர இதில் எந்தவிதமான வசதிகளும் இருப்பதில்லை. பிரேக் அடித்தால் 10 அடி தூரம் சென்றுதான் நிற்கிறது.

மழை காலங்களில் பஸ்சுக்குள் ஒழுகுவதால் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளது. டெப்போக்களில் போதுமான உதிரி பாகங்கள் இல்லாததால் பேருந்துகளை முறையாக பராமரிக்க முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இதனால் சாலையோரங்களில் பிரேக் டவுன்ஆகி ஆங்காங்கே நிற்கும் நிலை தொடர்ந்து வருகிறது. கண்ட இடங்களில் நிற்கும் பேருந்துகளால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பயணிகளிடம் பதில் சொல்ல முடியாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருன்றனர். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் அரசு, போக்குவரத்து கழக பேருந்துகளின் தரத்தை உயர்த்தாததால் பயணிகள் முகம் சுளிக்கும் கழமாக மாறிவருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும், தனியாருக்கு வருமானம் அதிகாரித்து வருகிறது. தொடர்ந்து போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கும் அரசு முறையாக பேருந்துகளை பராமரித்து இயக்கினால் விபத்துகள் குறைவதுடன்,வருமா
னத்தை அதிகப்படுத்த முடியும். இதுகுறித்து சாத்தையா கூறுகையில், பரமக்குடி போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் ஓட்டையும் உடைசலுமாக காணப்படுகிறது. கிராமங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பிரேக் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் உயிரை கையில் பிடித்துகொண்டு பயணித்து வருகின்றனர். பேருந்துகளை தனியார் பேருந்துகளுக்கு இணையாக வசதிகளுடன் கொண்டு வந்தால் மட்டுமே அரசு பேருந்து மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றார்.

Tags : Passenger distress driver ,conductors ,breakdown ,
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...