×

கடலாடி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் கிராமமக்கள் மருத்துவமனையில் தஞ்சம்

சாயல்குடி, அக். 17:  கடலாடி சுற்றுவட்டார கிராமத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடலாடி மற்றும் அருகிலுள்ள கே.கருங்குளம், கே.கரிசல்குளம், பூதங்குடி, இந்திரா நகர், மங்களம், கண்ணன்புதுவன், தேவர் நகர், புரசங்குளம், கிடாக்குளம், தேராங்குளம், ஓரிவயல், மீனங்குடி, சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பாப்பாகுளம், ஆப்பனூர், ஆ.புனவாசல், ஏ.வேப்பங்குளம், பாடுவனேந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் அருகே குக்கிராமங்களும் தொடர்ச்சியாக உள்ளது. இப்பகுதியில் ஒரு வாரக்காலமாக மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளியுடன், கை, கால் மூட்டு வலி, உடல் அசதி, லேசான மயக்கத்துடன் காய்ச்சல் பரவி வருகிறது, பெரும்பாலானோர் கடலாடி அரசு மருத்துவமணையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். சிலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் வீடுகளில் முடங் கிடக்கின்றனர். இக்காய்ச்சல் அருகிலிருக்கும் இதர கிராமங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. எனவே சுகாதார துறையினர் கடலாடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவேண்டும் என்றனர்

Tags : sea ,
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!