அக்.20ம் தேதி நடக்கிறது வாகைகுளம் கருப்பசாமி முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் விதவிதமான பொம்மைகள் நேர்த்திக்கடன்

திருமங்கலம், அக். 17: வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு மனித உருவ மொம்மைகள் செய்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ளது வாகைகுளம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார்கருப்பசாமி முத்தாலம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் பக்தர்கள் தங்களது நோ்த்திக்கடனாக விதவிதமான மனித உருவங்களை மொம்மைவடிவில் செய்து ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். நேற்று இந்த திருவிழா வாகைகுளத்தில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக ஆசிரியர், போலீஸ்காரர், விவசாயி, ராணுவவீரர், விவசாயம் செழிக்க டிராக்டர், வாகனதொழில் சிறக்க கார் மற்றும் ஜீப், நாகதோஷம் மற்றும் விஷஜந்துகள் தொந்தரவு நீங்க பாம்பு கால்நடைகள் சிறந்து விளங்க ஆடு, மாடுகள் உள்ளிட்ட பல்வேறு களிமண் மொம்மைகளை செய்து நேர்த்திகடனாக கொண்டு வந்தனர். மாலை 4 மணிக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை தலையில் வைத்து ஊரின் மந்தையில் ஊர்வலமாக வந்து வயல்வெளிகளை கடந்து கண்மாய் கரையில் உள்ள அய்யனார் கோயிலுக்கு எடுத்துச் சென்று நேர்த்திகடனை செலுத்தினர்.இதில் வாகைகுளம், செக்கானூரணி, உசிலம்பட்டி, திருமங்கலம் பேரையூர், மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், திருப்பூர், நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று கிராமத்தில் வீடுகளில் கிடாவெட்டி அசைவ விருந்து நடைபெற்றது.

Related Stories:

>