×

கோயில் திருவிழா

ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் அருகே தும்மிச்சம்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் பூசாரி திருவேங்கடம்
தலைமையில் நடக்கிறது. 2ம் நாளான நேற்று சிறப்பு அன்னதான விழாவை திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியராஜன், நகர இளைஞரி செயலாளர் சதீஷ்குமார், சபரி, மாணவர் அணி அமைப்பாளர் அருண்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Temple Festival ,
× RELATED தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா...