×

கல்லூரியில் கண்காட்சி

பழநி, அக். 17: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் ‘படிக்கும்போதே பணம் ஈட்டும் வழி’ எனும் தலைப்பில் கண்காட்சி (கார்னிவெல்) நடந்தது. கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரவை துணைத் தலைவர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். கண்காட்சியில் இயற்கை உணவு, அழகு சாதன பொருட்கள், இனிப்பு- கார உணவு வகைகள் தொடர்பாக பல்வேறு வகையான விற்பனை கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு பணம் ஈட்டப்பட்டது. கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் வனிதா, வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர் ஜெயசெல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Exhibition ,
× RELATED அசத்தும் ஓவியக் கண்காட்சி