ஒட்டன்சத்திரத்தில் விண்வெளி யுக்தி மாபெரும் கண்காட்சி நாளை துவங்குகிறது

ஒட்டன்சத்திரம், அக். 17: இந்திய விண்வெளி ஆராச்சி மையம் (ஐஎஸ்ஆர்ஓ) மற்றும் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரி இணைந்து விண்வெளி யுக்திகள் 2019 என்ற மாபெரும் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டிகளை நாளை, நாளை மறுதினமும் (அக்.18, 19) நடத்தவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட டிஐஜி ஜோசிநிர்மல்குமார், சார் ஆட்சியர் உமா, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்ணு, அனுமியா, பிலாட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்கவுள்ளனர். இதில் விண்வெளி பற்றிய ஒளிச்சித்ரம், தொலைநோக்கி மூலம் விண்வெளியை காணுதல், ராக்கெட் உதிரி பாகங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த விளக்கப்படம் காண்பிக்கப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என முதல்வர் ஜஸ்டஸ் ராபி, செய்திதொடர்பாளர் கிறிஸ்பின் வெஸ்லி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: