×

வதிலையில் மரக்கன்று நடும் விழா

வத்தலக்குண்டு, அக். 17: வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் முனியாண்டி தலைமை வகித்து மரக்கன்று நட்டார். பள்ளி துணை ஆய்வாளர் அய்யனார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பட்டாலியன் சுபேதார் முருகன் கலந்து கொண்டு பேசினார். பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்சிசி கமாண்டர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags : planting ceremony ,Vadila ,
× RELATED மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா