×

பல் சிகிச்சை முகாம்

பழநி, அக். 17:     பழநி அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எம்ஆர்ஆர் அறக்கட்டளை, லோட்டஸ் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச பல் சிகிச்சை முகாம் நடந்தது. மருத்துவர்கள் ராம்பிரகாஷ், ஹாமிலி தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவ- மாணவிகளுக்கு பல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். பற்களை பராமரிக்கும் முறை, கால்சியம் சத்தின் அவசியம், நாளொன்றிற்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முகாமில் 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு பற்பசை, பிரஸ் ஆகியவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் கண்ணன், ராஜசிம்மன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : treatment camp ,
× RELATED பிஎஸ்ஆர் கல்லூரி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்