டெங்கு விழிப்புணர்வு பேரணி

ஆத்தூர், அக்.17: ஆத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாடு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்ற மாணவர்கள் பொதுமக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினர். பேரணியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், கோட்டாச்சியர் துரை, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, தாசில்தார் பிரகாஷ், நகரமன்ற முன்னாள் துணை தலைவர் மோகன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>