×

மேட்டூர் போலீஸ் ஸ்டஷேனில் சீமான் மீது காங். புகார்

மேட்டூர், அக்.17: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல்  பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 13ம் தேதி பேசும்போது, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார். சீமானை தேசவிரோதச் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என டிஜிபி மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்  அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ்  கட்சியின் சார்பில் நகர தலைவர் வெங்கடேசன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும்  வேண்டுமென தெரிவித்துள்ளனர்.


Tags : Seaman ,Mettur Police Station ,
× RELATED ஒரத்தநாட்டில் பொதுமக்கள் புகார் மனு மீதான குறைதீர் முகாம்