×

பலாத்கார வழக்கில் தண்டனைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

காடையாம்பட்டி, அக்.17: காடையாம்பட்டி அருகே மனநலம் பதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.            
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்ப்புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் லிங்குசாமி(35). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2014ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பதிக்கப்பட்டபெண்ணை பலாத்காரம் செய்ததாக அவரது உறவினர்கள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் லிங்குசாமியை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 4 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய லிங்குசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள், லிங்குசாமியின் உடலை மீட்டு போலீசுக்கு தெரியாமல் எரிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இதில், வழக்கில் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் லிங்குசாமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர், தண்டனை பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை...